ADDED : டிச 12, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: வெள்ளம் பாதித்த வட மாவட்டங்களுக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.1.70 லட்சம் நிவாரண பொருட்களை வழங்கினர்.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சார்பில் பொறியாளர்கள் இணைந்து, வெள்ளம் பாதித்த வடமாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 120 அரிசிமூடை, 80 ஆயிரம் பேருக்கு வேட்டி மற்றும் 65,000 பேருக்கு சேலை, போர்வை, கைலி போன்றவற்றை சேகரித்து சிவகங்கை கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை துறையில் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை பொறியாளர்கள் சுந்தரமாணிக்கம், பாரதிதாசன், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர், தாசில்தார் தங்கமணியிடம் நிவாரண பொருட்களை ஒப்படைத்தனர்.

