/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.காரைக்குடியில் இன்று மக்கள் தொடர்பு முகாம்
/
எஸ்.காரைக்குடியில் இன்று மக்கள் தொடர்பு முகாம்
ADDED : பிப் 14, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.காரைக்குடி ஊராட்சியில் இன்று தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஏற்பாடுகளை மானாமதுரை தாசில்தார் ராஜா, எஸ்.காரைக்குடி ஊராட்சி தலைவர் குழந்தை பாண்டியன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

