/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனியார் பஸ் சர்ச்சை அபராதம் விதிப்பு
/
தனியார் பஸ் சர்ச்சை அபராதம் விதிப்பு
ADDED : நவ 26, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் கண்டக்டர் பயணிகள் வாக்குவாதம், ஒரு வழிச்சாலையில் விதிமுறைகளை மீறி பயணத்தால் விபத்து, ஏர் ஹாரன் என பல்வேறு புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா தலைமையில் ஆய்வு நடந்தது.
போக்குவரத்து எஸ்.ஐ., மாடசாமி உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர். 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களின் ஏர் ஹாரன், டிரைவர் கண்டக்டர் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் டிரைவர் அருகில் பயணிகளை அமர வைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

