/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விழிப்புணர்வு இல்லாததால் போக்சோ வழக்கு அதிகரிப்பு
/
விழிப்புணர்வு இல்லாததால் போக்சோ வழக்கு அதிகரிப்பு
விழிப்புணர்வு இல்லாததால் போக்சோ வழக்கு அதிகரிப்பு
விழிப்புணர்வு இல்லாததால் போக்சோ வழக்கு அதிகரிப்பு
ADDED : நவ 27, 2025 07:01 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன. வளரிளம் பருவத்தில் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிப்பதோடு அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.
சிறார்கள் மீதான பாலியல் குற்ற செயல்கள் அதிகரித்ததால் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கவும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. வளரிளம் டீன் ஏஜ் பருவத்தில் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகயை பெற்றோர் கண்காணிப்பதோடு விழிப்போடு இருந்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் 2020ல் 62, 2021ல் 89, 2022ல் 80, 2023ல் 75, கடந்த ஆண்டு 45, இந்த ஆண்டு இதுவரை 37 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்சோ பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்கில் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி வருகிறது. எனினும் பள்ளி குழந்தைகள் மத்தியில் கெட்ட தொடுதல் நல்ல தொடுதல் குறித்து விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.

