/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளத்துார் அரிசி ஆலைகள் கழிவால் சுற்றுச்சூழல் பாதிப்பு கலெக்டரிடம் மக்கள் புகார்

ADDED : மார் 11, 2024 11:24 PM

சிவகங்கை: காரைக்குடி அருகே பள்ளத்துாரில் இயங்கும் அரிசி ஆலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக அப்பகுதி மக்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
பள்ளத்துார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரிசி ஆலைகள் மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தினமும் அரிசி ஆலைகளுக்கு ஏராளமானவர்கள் பணிக்கு செல்கின்றனர்.
இங்கு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் சேமிப்பு கிடங்கு, 6 இடங்களில் தனியார் அரிசி அரவை ஆலைகள் இயங்குகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் சாம்பல், துாசிகள் மற்றும் புகையினால் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.
குறிப்பாக சமைக்கும் உணவு பொருட்களில் சாம்பல் துகள் படர்ந்து விடுவதால், சாப்பிடவே முடியாத நிலை ஏற்படுகிறது. அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் புகையினால் மூச்சு திணறல், ஆஸ்துமா போன்றவற்றால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எனவே சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரிசி ஆலை கழிவு நீர், புகை, சாம்பல் துாசியை வெளி யேற்ற வேண்டும் என பள்ளத்துார் பேரூராட்சி நாராயணபுரம், கீழக்குடியிருப்பு பகுதி மக்கள் கலெக்டரிடம் நேற்று புகார் அளித்தனர். அவர் மாவட்ட சுற்றுச்சூழல் துறையினர் நேரடி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கமாறு கலெக்டர் பரிந்துரை செய்தார்.