ADDED : அக் 09, 2024 06:13 AM

பழையனுார் : பழையனுார் -- ஓடாத்துார் இடையே கிருதுமால் நதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.
பழையனுாரைச் சுற்றியுள்ள ஓடாத்தூர், எழுவனூர், வல்லாரேந்தல், வாகைகுளம், சேந்தநதி உள்ளிட்ட எட்டு கிராம மக்கள் தேவைகளுக்கு பழையனுார் வந்து செல்கின்றனர்.
பழையனுார் -- ஓடாத்துார் இடையே செல்லும் கிருதுமால் நதியால் மழை காலங்களிலும், கிருதுமால் நதியிலும் தண்ணீர் திறப்பின் போதும் எட்டு கிராமங்களுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த 2023, ஜூலையில் நபார்டு வங்கி உதவியுடன் மூன்றரை கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
15 மாதங்களில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.
அக்டோபர் 15ல் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பாலப்பணிகள் நிறைவடைந்தது கிராமமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

