/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனியார் பங்களிப்புடன் பாலாறு துார்வாரும் பணி
/
தனியார் பங்களிப்புடன் பாலாறு துார்வாரும் பணி
ADDED : ஏப் 06, 2025 07:50 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஓடும் பாலாற்றை தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணி துவக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உருவாகும் பாலாறும், உப்பாறும் சிங்கம்புணரியில் ஒன்றாக கலந்து திருப்புத்துார் வரை செல்கிறது. பிறகு அங்கிருந்து விருசுழியாறு என்ற பெயரில் தொண்டி அருகே கடலில் கலக்கிறது.
இந்த ஆறுகள் ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களால் மறைந்துவந்தது. இது குறித்து ஏற்கனவே தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனியார் நிதியுதவியுடன் ஆறுகளை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 26 கி.மீ., நீள பாலாறும், இரண்டரை கி.மீ., நீள உப்பாறும் ரூ. 33.39 லட்சம் செலவில் சீரமைக்கப்பட உள்ளது. சிங்கம்புணரி அருகே சிலநீர்பட்டி பாலாற்றில் நேற்று இப்பணியை துவக்கி வைத்து சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்ததாவது:
தனியார் நிதி உதவியுடன் பாலாறு, உப்பாறு துார்வாரும் பணியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளன. இப்பணியின் போது நில அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்படும். என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களை கொண்டு ஆற்றின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்படும்.
இதேபோல் விருசுழியாறு பகுதியிலும் 48 கி.மீ தூரத்திற்கு ரூ. 54 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது, என்றார்.

