/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
/
ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
ADDED : மார் 21, 2024 02:02 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்தவர் ராஜா மனைவி அமிர்தம் 65. பெங்களூரு சென்றிருந்த இவர், காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழாவிற்காக நேற்று முன்தினம் இரவு ரயிலில் காரைக்குடிக்கு வந்தார்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் முன்பு ரயில் மெதுவாக சென்றது. அமிர்தம் இருந்த ரயில் பெட்டிக்கு வந்த ஒருவர், அவர் அணிந்திருந்த 11 பவன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு ரயில்இருந்து குதித்து தப்பியோடினார். அமிர்தம் காரைக்குடி ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
போலீசார் ஆய்வு செய்த போது அந்த மர்ம நபர், அடுத்த ரயிலில் ஏறி புதுக்கோட்டை சென்றது தெரிய வந்தது. புதுக்கோட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்திருடனை பிடித்த புதுக்கோட்டை போலீசார் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது அரியலுார் மாவட்டம் செந்துறை தாலுகா வீராக்கனையைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சக்திவேல் 34 என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்ததோடு செயினை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்.

