/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு; தமிழக அளவில் நாளை நடக்கிறது
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு; தமிழக அளவில் நாளை நடக்கிறது
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு; தமிழக அளவில் நாளை நடக்கிறது
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு; தமிழக அளவில் நாளை நடக்கிறது
ADDED : மார் 15, 2024 11:47 PM
சிவகங்கை : அ... ஆ... இ... ஈ... படிக்கும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது.
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க வேண்டும் என்பதே வயது வந்தோர் கல்வி திட்ட முதன்மை நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் 2023 செப்., முதல் படித்து வரும் அனைத்து கற்போருக்கும் இறுதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது. கற்போர் எழுத்தறிவு மையத்திலேயே இத்தேர்வு நடைபெறும்.
அன்று காலை 10:00 மணிமுதல் மாலை 5:00 மணி வரை ஏதேனும் 3 மணி நேரத்திற்கு இத்தேர்வினை எழுதி காண்பிக்க வேண்டும்.
பயிற்சியாளரிடம் அ... ஆ... இ.... ஈ.... என எழுதி காண்பிப்பதோடு, அவர்கள் அளித்த அடிப்படை பயிற்சிகளில் இருந்து கேட்கும் வினாவிற்கும் விடை அளிக்க வேண்டும்.
அரசு தேர்வுகள் போன்றே தேர்வு மையங்கள் ஏற்படுத்தி இத்தேர்வினை நடத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கற்போருக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத்தறிவு சான்று, தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

