/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை கரையோரம் சகதி; வாகன ஓட்டிகள் திணறல்
/
வைகை கரையோரம் சகதி; வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : நவ 30, 2024 06:32 AM

மானாமதுரை; மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையோரம் தார் ரோடு அமைக்கப்படாததால் மழை காலங்களில் சகதி ரோடாகி வாகனங்களில் செல்ல முடிவதில்லை.
மானாமதுரையில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும், ஒரு கரையில் ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து ஆதனுார் தடுப்பணை வரையிலும், மற்றொரு கரையில் சோனையா கோயிலிலிருந்து ஆதனுார் தடுப்பணை வரை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஆதனுாரில் தடுப்பணை கட்டப்பட்டபோது இரு கரைகளிலும் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இரு கரைகளிலும் மண் ரோடு மட்டுமே உள்ள நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பெய்ததொடர் மழையால் ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து ஆதனுார் தடுப்பணை வரை உள்ள ரோட்டில் சகதியாக காட்சியளிப்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் ஆற்றின் இரு கரைகளிலும் தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

