ADDED : பிப் 02, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை கண்டதேவி ரோடு சந்திப்பில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடமாடும் மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் நகராட்சி துணை தலைவர் ரமேஷ் துவக்கி வைத்தார். இதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், எச்.ஐ.வி. ரத்த பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரை வழங்கி ஆலோசனை வழங்கினர். கவுன்சிலர் விக்னேஸ்வரி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முருகன், மக்களை தேடி மருத்துவ குழு செவிலியர்கள் பங்கேற்றனர்.

