/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக தரம் உயர்த்தவும் அமைச்சரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
காரைக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக தரம் உயர்த்தவும் அமைச்சரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
காரைக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக தரம் உயர்த்தவும் அமைச்சரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
காரைக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக தரம் உயர்த்தவும் அமைச்சரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 07, 2024 05:31 AM
சிவகங்கை: காரைக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடம் வழங்கி தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட அளவில் சிவகங்கையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ், காரைக்குடியில் ஒரு ஆய்வாளர் அலுவலகம் செயல்படுகிறது. இவ்விரு பிரிவின் கீழ் 10,500 பெர்மிட் உடன் ஓடும் லாரி, ஆட்டோக்கள் பதிவு செய்துள்ளனர்.
அதே போன்று பெர்மிட் இன்றி சொந்த உபயோகத்திற்காக ஓடும் டூவீலர், கார் என 4.5 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டுஉள்ளன. காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தின் கீழ் தற்போது காரைக்குடி, தேவகோட்டை ஆகிய இரு தாலுகாவிற்கு உட்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
மற்ற 7 தாலுகாவிற்கு உட்பட்ட வாகனங்கள் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன. மாவட்டத்திலேயே காரைக்குடி, தேவகோட்டை பகுதியில் தான் பெர்மிட் வாகனங்கள் 5500 வரையும், சொந்த உபயோகத்திற்கு பயன்படும் டூவீலர், கார்கள் 2.5 லட்சம் வரை பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு வருவாயும் அதிகரித்து வருகின்றன.
எனவே காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை, வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து இது குறித்து அறிக்கை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.
நேற்று முன்தினம் காரைக்குடியில் புதிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கரனிடம், காரைக்குடி (காங்.,) எம்.எல்.ஏ., மாங்குடி இங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இவரது கோரிக்கையை அமைச்சர் பெரியகருப்பனும் பரிந்துரை செய்தார். இதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்தார்.
அரசின் பரிசீலனை
வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறியதாவது, ஏற்கனவே அரசின் பரிந்துரைக்கு அனுப்பிவிட்டோம். வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக தரம் உயர்த்த, காரைக்குடி, தேவகோட்டை தாலுகாவுடன், திருப்புத்துார், சிங்கம்புணரி தாலுகாவை இணைக்க வேண்டும். காரைக்குடி எம்.எல்.ஏ., கோரிக்கையை அமைச்சரும் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார், என்றார்.

