/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
l சிவகங்கை அறிவுசார் மையத்தில் வசதிகள் இல்லை: பல லட்சம் செலவழித்தும் பயனில்லாத நிலை
/
l சிவகங்கை அறிவுசார் மையத்தில் வசதிகள் இல்லை: பல லட்சம் செலவழித்தும் பயனில்லாத நிலை
l சிவகங்கை அறிவுசார் மையத்தில் வசதிகள் இல்லை: பல லட்சம் செலவழித்தும் பயனில்லாத நிலை
l சிவகங்கை அறிவுசார் மையத்தில் வசதிகள் இல்லை: பல லட்சம் செலவழித்தும் பயனில்லாத நிலை
ADDED : செப் 07, 2025 03:06 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி அறிவுசார் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மாணவர்கள் படிக்க தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகங்கை நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் அறிவுசார் மையம் உள்ளது. இங்கு அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகின்றனர்.
மாணவர்கள் படிப் பதற்கு தேவையான புத் தகங்கள், கணினி உள்ளன. ஆனால் மாணவர்கள் கணினிகளை பயன் படுத்த போதிய இணைய வசதி கிடைப்பதில்லை. அதேபோல் அறிவுசார் மையத்தில் இயங்க கூடிய மின்விசிறி சரிவர இயங்குவதில்லை.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் படிப்பதில் தொய்வு ஏற்படுகிறது. அதேபோல் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வரும் மையத்தில் 3 கழிப்பறை தான் உள்ளது. அதில் பெண் களுக்கு ஒன்று தான் உள்ளது. கூடுதல் கழிப்பறை கட்ட வேண்டும்.
மற்ற மாவட்டங்களில் காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை அறிவுசார் மையங்கள் இயங்கு கிறது. ஆனால் இங்கு மட்டும் மாலை 6:00 மணியோடு முடிவடைந்து விடுகிறது. கூடுதல் நேரம் அறிவுசார் மையம் இயங்க வேண்டும். மாணவர் களின் டூவீலர்கள் அனைத்தும் பாதுகாப்பு இல்லாமல் ரோட்டில் நிறுத்தப் படுகிறது.
அதேபோல் மதிய நேரத்தில் மாணவர்கள் உணவு அருந்துவதற்கு போதிய வசதி கிடையாது மையத்திற்கு வெளியில் வெயிலில் அமர்ந்து தான் உணவு அருந்த வேண்டும்.
மையத்திற்கு வெளியே மாணவர்கள் உணவு அருந்துவதற்கு ஏற்ற தகர கொட்டகை அமைக்க வேண்டும். இது குறித்து பலமுறை நகராட்சியில் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினசரி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த அறிவுசார் மையத்தை பயன்படுத்தி அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயராகி வரும் வேளையில் மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.