திருப்புவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழா கணபதி ஹோமத்துடன் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. நேற்று காலை ஏழு மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 9:00 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். காலை 9:44 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீரை ஊற்றி சுவாமிநாத பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின் பாமா, ருக்மிணி சமேத பாலகிருஷ்ண பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
* சிங்கம்புணரி அம்மிகுடுத்து வளவு தொட்டிச்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப். 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருப்பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

