/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி விலக்கில் மேம்பாலம் கட்ட திட்டம்; இடிக்கப்படும் அரசு கட்டடங்களால் பல லட்சம் வீணானது
/
கீழடி விலக்கில் மேம்பாலம் கட்ட திட்டம்; இடிக்கப்படும் அரசு கட்டடங்களால் பல லட்சம் வீணானது
கீழடி விலக்கில் மேம்பாலம் கட்ட திட்டம்; இடிக்கப்படும் அரசு கட்டடங்களால் பல லட்சம் வீணானது
கீழடி விலக்கில் மேம்பாலம் கட்ட திட்டம்; இடிக்கப்படும் அரசு கட்டடங்களால் பல லட்சம் வீணானது
UPDATED : மே 04, 2025 08:15 AM
ADDED : மே 04, 2025 05:24 AM

மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சிலைமான் புளியங்குளம், மணலூர், திருப்புவனம், உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் கீழடி விலக்கு, நரிக்குடி விலக்கு, பிரமனூர் விலக்கு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன.
விபத்துகளை தவிர்க்க கீழடி விலக்கில் மேம்பாலம் கட்ட வேண்டும் என நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டதில் இருந்தே கிராமமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இது சம்பந்தமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு பணிகள் நடத்தின. இந்நிலையில் கீழடி விலக்கில் அதி நவீன சி.சி.டி.வி., கேமரா, போலீசார் ஒய்வெடுக்க தனி அறை உள்ளிட்டவற்றுடன் சோதனை சாவடி அமைக்கப்பட்டு 2023, செப்டம்பரில் திறக்கப்பட்டது. அருகிலேயே பயணிகள் நிழற்குடையும் ஐந்து லட்ச ரூபாய் செலவில் செட்டிநாடு கட்டட கலை பாணியில் கட்டப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் கீழடி விலக்கில் அலங்கார வளைவும் அமைக்கப்பட்டது.
விபத்துகளை தவிர்க்க கீழடி விலக்கில் 45 மீட்டர் அகலத்துடன் இருந்த நான்கு வழிச்சாலை 60 மீட்டராக அகலப்படுத்தப்பட்டு உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி விட்டன.
இதனால் போலீஸ் சோதனை சாவடி அலங்கார வளைவு உள்ளிட்டவை அகற்றப்பட உள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் வீணாக உள்ளன.
ஏற்கனவே மேம்பாலம் அமைய உள்ள நிலையில் சோதனை சாவடி உள்ளிட்டவை அமைப்பதை தாமதப்படுத்தியிருக்கலாம், இனி சோதனை சாவடி மாவட்ட எல்லையான சிலைமானை ஒட்டிதான் அமைக்க முடியும், அங்கு போதிய வசதிகளும் கிடையாது. அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை இன்றி அவசர கோலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்படுவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

