ADDED : ஜூலை 13, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் செல்லையா தலைமையில் நடந்தது.
புதிய தலைவர் அர்ச்சுனன், செயலாளர் செல்வம், பொருளாளர் கண்ணாபாஸ்கர் ஆகியோர் பதவியேற்றனர். முன்னாள் ஆளுநர்கள் தனிக்கொடி, சின்ன அருணாசலம், முன்னாள் துணை ஆளுநர் ஆறுமுகம், மண்டல தலைவர் அழகு சுந்தரம், வட்டார தலைவர் ஜெகநாதன் , சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி தாளாளர் சோமசுந்தரம் பங்கேற்றனர்.
புதிய தலைவர் அர்ச்சுனன் ஏற்புரை நிகழ்த்தினார். செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

