/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓவர் லோடால் பாதியில் நின்ற அரசு டவுன் பஸ்! போதிய பஸ் இல்லாததால் மக்கள் அவதி
/
ஓவர் லோடால் பாதியில் நின்ற அரசு டவுன் பஸ்! போதிய பஸ் இல்லாததால் மக்கள் அவதி
ஓவர் லோடால் பாதியில் நின்ற அரசு டவுன் பஸ்! போதிய பஸ் இல்லாததால் மக்கள் அவதி
ஓவர் லோடால் பாதியில் நின்ற அரசு டவுன் பஸ்! போதிய பஸ் இல்லாததால் மக்கள் அவதி
ADDED : ஏப் 02, 2024 06:50 AM

மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் சென்று வரும் நிலையில் காலை நேரங்களில் போதுமான பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் செல்லும் ஒரு சில பஸ்களில் தொங்கிக் கொண்டும் கூரையில் ஏறியும் பயணம் செய்யும் நிலை உள்ளது.
நேற்று காலை 8:15 மணிக்கு மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில்இருந்து சிவகங்கைக்கு சென்ற அரசு டவுன் பஸ் ஒன்றில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் மற்றும்பயணிகள் ஏறினர். பஸ் காந்தி சிலையை தாண்டி யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப் அருகே வரும் போது பஸ் ஒரு பக்கமாக சாய்ந்தது. டிரைவர் உடனடியாக சுதாரித்து பஸ்சை நிறுத்தினார்.
பஸ்சில் ஏறி இருந்த மாணவர்கள் மற்றும் பயணிகள் சிலர் இறங்கினால் தான் பஸ்சை தொடர்ந்து இயக்க முடியும் என்ற நிலை உருவானது. நீண்ட நேரமாக பஸ் அங்கேயே நின்றது.
சில நிமிடங்களில் அவ்வழியாக வந்த பஸ்களில் பிற பயணிகள் ஏறி சிவகங்கைக்கு சென்றனர்.
இதுகுறித்து மாணவர்கள், ஊழியர்கள் கூறுகையில், மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு தினந்தோறும் ஏராளமானோர் பள்ளி,கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வேலை நிமித்தமாக சென்று வரும் நிலையில் காலை நேரங்களில் போதுமான பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் வரும் பஸ்களில் அனைவரும் செல்ல வேண்டியுள்ளது.
பலமுறை போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து நாட்கள் இல்லாவிட்டாலும் கூட்டம் அதிகமாகஇருக்கும் நேரத்தில் சிறப்பு பஸ்களை இயக்கி மக்களின் அவஸ்தையை அதிகாரிகள் தீர்க்க வேண்டும் என்றனர்.

