/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி பலி
/
மானாமதுரை நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி பலி
மானாமதுரை நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி பலி
மானாமதுரை நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி பலி
ADDED : டிச 21, 2025 03:26 AM

மானாமதுரை: மானாமதுரை தனியார் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி.,படிக்கும் 6 வயது சிறுமி மயங்கி விழுந்து இறந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேதுபதி நகர் பகுதியை சேர்ந்த இளங்கோ- பவானி மகள் தேஜாஸ்ரீ 6. தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படித்தார். நேற்று பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறுமி ஏஞ்சல் உடை அலங்காரத்துடன் பள்ளிக்கு சென்றார்.
காலை 9:00 மணிக்கு வகுப்பறையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை உடற் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிறுமிக்கு முன்னரே ஏதேனும் உடல்நல கோளாறு இருந்ததா என உடற்கூறாய்வுக்கு பின்னர் தான் பெரிய வரும் என போலீசார் கூறினர்.

