/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுரைக்கு 'லொட... லொட...' பஸ்கள் கலெக்டரிடம் ஊழியர்கள் புகார்
/
மதுரைக்கு 'லொட... லொட...' பஸ்கள் கலெக்டரிடம் ஊழியர்கள் புகார்
மதுரைக்கு 'லொட... லொட...' பஸ்கள் கலெக்டரிடம் ஊழியர்கள் புகார்
மதுரைக்கு 'லொட... லொட...' பஸ்கள் கலெக்டரிடம் ஊழியர்கள் புகார்
ADDED : ஏப் 08, 2025 05:19 AM
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மதுரைக்கு 'லொட... லொட' பஸ்கள் இயக்கப்படுவதால் அரசு ஊழியர்கள் பாதிப்பிற்கு உள்ளாவதாக கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
சிவகங்கையில் இருந்து மதுரைக்கு தினமும் ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன. கலெக்டர்அலுவலக வளாகத்தில்உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பணிமுடிந்து மதுரைக்கு செல்ல ஏதுவாக, கலெக்டர் அலுவலகத்தில்இருந்து மதுரைக்கு 8 பஸ்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் மாலை 5:50 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மதுரைக்கு புறப்படும் அரசு பஸ் 'லொட... லொட...'என ஓடுவதாகவும், பஸ் கண்ணாடிகள் அனைத்தும் உதிர்ந்து விழுவதால், உயிர் அச்சத்தில் பயணிக்கின்றோம்.
மேலும், மாலை 5:50 மணிக்கு பின் 6:15 மணிக்கு மதுரை செல்லும் பஸ்சை அரசு போக்குவரத்து கழகம் எந்தவித அறிவிப்பின்றி நிறுத்தி விட்டது. அந்த பஸ் ஓடாததால், ஒரே பஸ்சில் 100 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மதுரைக்கு செல்ல முடியாமல், படியில் தொங்கி கொண்டு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே தினமும் மாலை 5:50 மணிக்கு புறப்படும் பஸ்சை தரமானதாகவும், கூடுதலாக மாலை 6:15 மணிக்கு பஸ் இயக்கினால்மட்டுமே, கலெக்டர் அலுவலக அலுவலர், ஊழியர்கள் தடையின்றி சென்று வர முடியும்.
எனவே மதுரைக்கு கலெக்டர் அலுவலகத்தில்இருந்து தரமான, கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.

