ADDED : பிப் 07, 2024 12:03 AM
சிவகங்கை : மின்வாரிய 'கேங்மேன்' ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட துணை தலைவர் ஜி.சுப்புராம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரமேஷ்பாபு, பாண்டி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் எஸ்.உமாநாத், மாவட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி ஆகியோர் பேசினர்.
மாவட்ட பொருளாளர் வி.மோகனசுந்தர் நன்றி கூறினார். மின்வாரிய கேங்மேன்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். 'கேங்மேன்'களை கள உதவியாளராக மாற்ற வேண்டும். விருப்ப மாறுதல் டிரான்ஸ்பரை விரைந்து வழங்கி, காலியிடத்தை நிரப்ப வேண்டும். இறந்த ஊழியர் குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

