/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி, மானாமதுரையில் மாடுகளால் விவசாயம் பாதிப்பு
/
இளையான்குடி, மானாமதுரையில் மாடுகளால் விவசாயம் பாதிப்பு
இளையான்குடி, மானாமதுரையில் மாடுகளால் விவசாயம் பாதிப்பு
இளையான்குடி, மானாமதுரையில் மாடுகளால் விவசாயம் பாதிப்பு
ADDED : செப் 07, 2025 03:06 AM
இளையான்குடி: இளையான்குடி,மானாமதுரையில் பன்றிகளால் ஏற்கனவே விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காட்டு மாடுகளாலும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இளையான்குடி, சூராணம், முனைவென்றி, சாலைக்கிராமம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். சில வருடங்களாக குண்டு மிளகாய், நெல், பருத்தி, வாழை போன்ற பயிர்களை இப்பகுதிகளில் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்போது இளையான்குடி அருகே உள்ள பஞ்சாத்தி, சங்கனி, விரையாத கண்டன், கட்டனுார் கிராமப் பகுதிகளில் காட்டு மாடுகள் இரவு நேரங்களில் கூட்டமாக வயல்களில் புகுந்த பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதேபோன்று மானா மதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் பன்றிகள் மற்றும் மாடு களால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறிய தாவது:
சில வருடங்களாக பன்றிகளால் விவசாயம் பாதித்த நிலையில் அவற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது காட்டு மாடுகளும் கூட்டம், கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
விதை நெல் துாவி நன்றாக முளைத்து வரும் பயிர்களை மாடுகள் சேதப்படுத்தி வருவதால் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறோம் என்றனர்.