/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனுமதி இல்லாத போர்டு அகற்ற கலெக்டர் உத்தரவு
/
அனுமதி இல்லாத போர்டு அகற்ற கலெக்டர் உத்தரவு
ADDED : டிச 13, 2025 05:24 AM
இளையான்குடி: சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டு, விளம்பரப் பலகை, தற்காலிக வளைவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இளையான்குடி அருகே உள்ள வடக்கு சாலை கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் ராதாகிருஷ்ணன் என்பவர் அரசியல் கட்சி மற்றும் சமுதாய அமைப்பினர்களால் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டு, பதாகை, பலகை மற்றும் தற்காலிக வளைவுகளை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் 2022-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் வரும் டிச.15ம் தேதிக்குள் மேற்கண்டவற்றை உரிய போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி அதற்கான அறிக்கையை புகைப்படத்துடன் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் உரிய அனுமதி இன்றி வைத்துள்ள பிளக்ஸ், பதாகைகள், பலகைகள் மற்றும் தற்காலிக வளைவுகளை உடனடியாக அகற்றி சிவகங்கை கோட்டாட்சியர், கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலை துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் புகைப்படத்துடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தர விட்டுள்ளது.

