/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடிக்கு ஜன.18ல் முதல்வர் ஸ்டாலின் வருகை வேளாண், சட்டக்கல்லுாரி கட்டடம் திறப்பு

ADDED : டிச 24, 2025 05:34 AM
சிவகங்கை: காரைக்குடியில் ரூ.165 கோடியில் கட்டப்பட்ட வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சட்டக்கல்லுாரி, மணி மண்டபத்தை ஜன., 18ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் காரைக்குடி அருகே செட்டிநாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்ட ரூ.61.78 கோடியும், காரைக்குடி அருகே கழனிவாசலில் சட்டக் கல்லுாரிக்கான வகுப்பறை கட்டடம், கருத்தரங்கு கூடம் கட்ட ரூ.100.45 கோடி ஒதுக்கீடு செய்தார்.
அதே போன்று வரலாற்று சிறப்பு பெற்ற சிராவயலில் சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியும், ஜீவாவும் சந்தித்த இடத்தில் மணிமண்டபம் கட்ட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தார்.
இந்த நிதியில் வேளாண், சட்டக்கல்லுாரி, மணிமண்டபம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்துள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜன., 18 அன்று வேளாண், சட்டக்கல்லுாரிக்கான புதிய கட்டடங்களை திறந்து வைத்து, சிராவயலில் உள்ள மணிமண்டபத்தை பார்வையிடுகிறார். முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் விதமான ஏற்பாடுகளை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.