/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் குழாய் உடைந்தது குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு
/
குடிநீர் குழாய் உடைந்தது குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு
குடிநீர் குழாய் உடைந்தது குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு
குடிநீர் குழாய் உடைந்தது குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு
ADDED : அக் 25, 2024 05:22 AM

மானாமதுரை: மானாமதுரையில் குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 4500 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராஜகம்பீரம் வைகை ஆற்றுப்பகுதியில் போர்வெல் அமைத்து அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு மானாமதுரையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமிக்கப்பட்ட பின்னர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் ராஜகம்பீரம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இதனால் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இன்று அல்லது நாளைக்குள் குடிநீர் விநியோகம் மீண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றனர்.

