/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை எம்.பி.,யை நிர்ணயிக்கும் பெண்கள்
/
சிவகங்கை எம்.பி.,யை நிர்ணயிக்கும் பெண்கள்
ADDED : ஏப் 23, 2024 11:46 PM
திருப்புத்துார், - சிவகங்கை லோக்சபா தொகுதி தேர்தல் முடிவை பெண் வாக்காளர்களே நிர்ணயிக்கின்றனர்.
சிவகங்கை தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் ஐந்து கட்சிகள் போட்டியிட்டாலும், காங்.,பா.ஜ.,அ.தி.மு.க.,விடையே தான் முதலிடத்திற்கு போட்டி நிலவியது. பிரசாரக் களத்திலும் இவர்களே முன்னணியில் இருந்தனர்.
தொகுதியின் மொத்த வாக்காளர்களான 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 பேரில் பெண் வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட 29,228 பேர் அதிகமாக இருந்தனர். இதனால் தேர்தல் பிரசாரங்களில் பெண்களை அதிகமாக வரவழைத்தே கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்.19 ல் நடந்த தேர்தல் ஓட்டுப் பதிவில் 64.25 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்தனர்.
அதில் பெண் வாக்காளர்களே அதிகமானோர் ஓட்டளித்துள்ளனர்.ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 84,843 பேர் கூடுதலாக ஒட்டளித்துள்ளனர்.
ஆண் வாக்காளர்களில் பலர் வெளியூர்களில் வேலை நிமித்தமாக இருப்பதால் ஓட்டுப்பதிவில் பங்கேற்கவில்லை. ஆண் வாக்காளர்களில் 40 சதவீதம் பேர், அதாவது 3 லட்சத்து 19 ஆயிரத்து 872 பேர் தங்கள் ஓட்டை பதிவு செய்யவில்லை. இதனால் பெண் வாக்காளர் எண்ணிக்கை வழக்கத்தை விட மிகவும் கூடுதலாக இருந்தது.
சிவகங்கை தொகுதியின் தேர்தல் முடிவை பெண் வாக்காளர்களே நிர்ணயிக்கும் நிலை உருவாகியுள்ளது.

