ADDED : மார் 24, 2024 05:24 AM
சிவகங்கை : சிவகங்கை எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் சன்னாசி மகன் காமராஜ் 47. இவர் சிவகங்கை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
இவரும் இவரது உறவினரான பரமக்குடியை சேர்ந்த மருதுபாண்டியும் சோழபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு நேற்று காலை சிவகங்கைக்கு டூவீலரில் சென்றனர்.
சோழபுரம் தனியார் கல்லுாரி அருகே சென்ற போது மினிபஸ் திடீரென நிற்கவும் காமராஜ் மற்றும் மருதுபாண்டி சென்ற டூவீலர் பஸ்சில் மோதியதில் காமராஜ் இறந்தார்.
மருதுபாண்டி சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் 60. இவர் கொட்டகை தொழிலாளி.
இவர் நேற்று சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரண்மனை வாசல் நோக்கி டூவீலரில் சென்றுள்ளார்.
அப்போது சண்முகராஜா கலையரங்கம் அருகே பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவகங்கை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

