ADDED : ஏப் 11, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடியில் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் தலைவரும், நீதிபதியுமான ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் சமரச தினம் நடந்தது.
இதில் கோர்ட்டுகளில் நடக்கும் வழக்குகளை சமரசமாக முடிப்பது, சமரசத்தை எவ்வாறு நாடுவது, சமரசத்தீர்வு காணும் வழியும் பயனும், சமரசத்திற்கு உகந்த வழக்குகள் குறித்த துண்டு பிரசுரங்களை அரசு அலுவலகங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் இளையான்குடி கோர்ட் நீதிமன்ற சமரச வக்கீல் அண்ணாதுரை சட்டப்பணிகள் குழு இளவரசன்ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர். வக்கீல்கள் சிவக்குமார், கல்யாணி, குமார், ரவி கலந்து கொண்டனர்.

