ADDED : மே 14, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார்: எஸ்.புதூர் ஒன்றியத்தில்கடந்த ஒரு மாதமாக கோடை வெப்பம் வாட்டி ஏராளமான மரங்கள் காய்ந்து வந்த நிலையில் நேற்று மதியம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புழுதிபட்டி-பொன்னமராவதி சாலையில் மாயாண்டிபட்டி அருகே நடுரோட்டில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

