/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கோயிலில் பங்குனி விழா நிறைவு
/
மானாமதுரை கோயிலில் பங்குனி விழா நிறைவு
ADDED : மார் 28, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா கடந்த 16ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நாட்களின் போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேக, ஆராதனைகளும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி கடந்த 23ந்தேதி நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளன்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெற்றது.

