/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி; மார்ச் 30ல் இறுதி வேட்பாளர் பட்டியல்
/
வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி; மார்ச் 30ல் இறுதி வேட்பாளர் பட்டியல்
வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி; மார்ச் 30ல் இறுதி வேட்பாளர் பட்டியல்
வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி; மார்ச் 30ல் இறுதி வேட்பாளர் பட்டியல்
ADDED : மார் 27, 2024 06:39 AM
சிவகங்கை : சிவகங்கை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். மனுக்கள் வாபஸ் பெற மார்ச் 30 கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பபட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய இடங்களில் 16 லட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். பா.ஜ., சார்பில் தேவநாதன், காங்., சார்பில் கார்த்தி எம்.பி., அ.தி.மு.க., சார்பில் ஏ.சேவியர்தாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் தவிர்த்து சுயேச்சையாக போட்டியிட நேற்று வரை 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இங்கு மாற்று வேட்பாளர், ஒரே வேட்பாளர் 2 மற்றும் 3 வேட்பு மனு தாக்கல், சுயேச்சை என 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (மார்ச் 27) கடைசி நாளாக இருப்பதால், காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை கலெக்டர் ஆஷா அஜித் மனுக்களை பெறுவார்.
மார்ச் 28 அன்று அனைத்து வேட்பாளர், அவர்களது பிரதிநிதிகள் முன் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற மார்ச் 30 கடைசிநாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் கலெக்டர் மூலம் வெளியிடப்படும்.

