/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் கனமழை வாரச்சந்தையை சூழ்ந்த நீர்
/
இளையான்குடியில் கனமழை வாரச்சந்தையை சூழ்ந்த நீர்
ADDED : மே 19, 2024 06:24 AM

இளையான்குடி : இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதோடு, வாரச்சந்தையிலும் மழைநீர் தேங்கியது.
இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், முனைவென்றி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கடுமையான கோடை வெயில் அடித்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று மாலை இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கோடை விவசாயம் செய்து வந்த விவசாயிகள் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.
இளையான்குடியில் நடைபெற்ற வாரச்சந்தையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.

