/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தலை எழுத்தை நிர்ணயிக்கும் முதல்முறை வாக்காளர்கள் கருத்து
/
தலை எழுத்தை நிர்ணயிக்கும் முதல்முறை வாக்காளர்கள் கருத்து
தலை எழுத்தை நிர்ணயிக்கும் முதல்முறை வாக்காளர்கள் கருத்து
தலை எழுத்தை நிர்ணயிக்கும் முதல்முறை வாக்காளர்கள் கருத்து
ADDED : ஏப் 20, 2024 05:30 AM

மாற்றத்தை நோக்கி அளித்த ஓட்டு
ஆர்.ஹரிதா தர்ஷினி, இன்ஜி., மாணவி, சிவகங்கை: இளைஞர்கள் அதிகளவில் ஓட்டளிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறோம். ஒரு மாற்றத்தை விரும்பி ஓட்டளித்தேன். பழைய நடைமுறை இன்றி இளைஞர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஓட்டளிக்கிறோம். குடும்பத்தில் கூட ஆலோசனை செய்வதில்லை. இன்றைய இளைஞர்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதை நாங்களே ஆராய்ந்து வைத்துள்ளோம். நான் அளித்த ஓட்டு மூலம் வெற்றி பெறும் எம்.பி., நம் தேவையை அறிந்து பணி செய்வார் என நம்புகிறேன். நாடு மற்றும் இளைஞர்கள் வளர்ச்சி, வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் தரும் அரசு அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஓட்டளித்தேன்.
தேசிய, தமிழக நலன் கருதி ஓட்டு
வி.விஷ்ணு பிரியா, சாப்ட்வேர் இன்ஜி., அரளிக்கோட்டை: நான் யாருக்கு ஓட்டு போட்டேனோ அவர் வெற்றி பெற்று தொகுதிக்கு நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் போட்டேன். நான் ஓட்டளித்த வேட்பாளர் அனைத்து நன்மைக்காகவும் பாடுபடுவார். தேசிய, தமிழக நலன் கருதி செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மத்தியில் அமையும் அரசு, இளைஞர்களின் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் அமை வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஓட்டளித்தேன்.

