/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரத்த பரிசோதனை முடிவு தாமதம் காரைக்குடியில் நோயாளிகள் அவதி
/
ரத்த பரிசோதனை முடிவு தாமதம் காரைக்குடியில் நோயாளிகள் அவதி
ரத்த பரிசோதனை முடிவு தாமதம் காரைக்குடியில் நோயாளிகள் அவதி
ரத்த பரிசோதனை முடிவு தாமதம் காரைக்குடியில் நோயாளிகள் அவதி
ADDED : ஆக 23, 2024 04:11 AM
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில், பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்படுகிறது.
இங்கு காரைக்குடி, சூடாமணிபுரம், சுப்பிரமணியபுரம், கணேசபுரம், களவாய் பொட்டல், மருதுபாண்டி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் டாக்டர்கள் மூலம் புற நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்கப்படுகிறது.
இங்குள்ள பல பிரிவுகளில் போதிய பணியாளர்கள் இல்ல. இந்நிலையில் ரத்த பரிசோதனை நிலையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், ரத்த பரிசோதனை செய்ய தாமதமாவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். சமூக ஆர்வலர் முகமதுகனி ராஜ்கபூர் கூறுகையில்:
ரத்த பரிசோதனை நிலையத்தில் ஊழியர்கள் இல்லாததால், தனியார் கல்லூரியில் இருந்து பயிற்சிக்கு வரும் மாணவிகள் ரத்த பரிசோதனை செய்கின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி இல்லாததால், பரிசோதனைக்கு வரும் வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். நீண்ட நேரம் காத்துக் கிடந்து ரத்தப் பரிசோதனைக்கு கொடுத்து சென்றால் முடிவு தெரிய இரண்டு நாட்கள் கழித்து வர கூறுகின்றனர். வேறு வழியின்றி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்திற்கு சென்று செலவு செய்ய வேண்டியுள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் அவதியடைகின்றனர். முறையாக ஊழியர்களை நியமித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

