/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரம் கோயிலில் கூல் பெயிண்ட் அவசியம்
/
மடப்புரம் கோயிலில் கூல் பெயிண்ட் அவசியம்
ADDED : ஏப் 23, 2024 12:16 AM

திருப்புவனம் : கோடை வெயில் தாக்கத்தால் பக்தர்கள் சிரமம் அடைவதை தவிர்க்க, மடப்புரம் பத்ரகாளி கோயில் வளாகத்தில் 'சம்மர் கூல் பெயிண்ட்' அடிக்க வேண்டும்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது அனைத்து அம்மன், பெருமாள் கோயில்களில் சித்திரை திருவிழா நடப்பதால், அத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், மடப்புரத்திற்கு அதிகளவில் வருகின்றனர்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திறந்த வெளியில் உள்ள மடப்புரம் பத்ர காளியம்மன் சன்னதியை சுற்றி தரையில் உஷ்ணத்தின் தாக்கத்தை தவிர்க்க தரையில் 'சம்மர் கூல் பெயிண்ட்' அடிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

