
காரைக்குடி : காரைக்குடி ஐயப்பா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இளம் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளித் தலைவர் மணிகண்டன் தலைமை ஏற்றார். சென்னை ஆரோ கல்வி ஆலோசனை நிறுவன நிறுவனர் மாலதி மழலையர்களுக்கு பட்டம்வழங்கி பேசினார். அழகப்பா பல்கலை., கல்வியியல் கல்லூரி பேராசிரியை சாந்தி வாழ்த்தினார். பள்ளி தலைமையாசிரியை வித்யா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை மாணவி அலமேலு தொகுத்து வழங்கினார்.
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் சேது ஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலகுழுத் தலைவர் சாந்தி,சிவகங்கை மருத்துவக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் சிவசங்கர் மழலையர் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கினர்.
குழந்தைகளின் அறிவுத் திறன்களை சோதித்தறியும் நிகழ்வுகளும், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. சேது பாஸ்கரா கல்விக் குழுமங்களின் நிறுவனர் சேது குமணன், பொருளாளர் திருநாவுக்கரசு, முதல்வர் ரோசாரியோ பங்கேற்றனர்.

