/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 ஐ.டி., ஊழியர்கள் பலி
/
பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 ஐ.டி., ஊழியர்கள் பலி
ADDED : செப் 16, 2024 11:27 PM

சிவகங்கை : சிவகங்கை பையூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் கார்த்திக் 33. இவர் சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் மகன் கலாநிதி 33. இவர் கோயம்புத்துாரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். பாண்டியராஜன் மகன் யோகேஸ்வரன் 29. இவர்கள் மூன்று பேரும் வளர்ப்பு நாயுடன் காரில் நேற்று முன்தினம் காளையார்கோவிலுக்கு நண்பரின் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு 11:40 மணிக்கு அங்கிருந்து சிவகங்கை புறப்பட்டனர்.
கொல்லங்குடி வங்கி அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே காரை ஓட்டிய கார்த்திக், கலாநிதி இறந்தனர்.
யோகேஸ்வரன் வலது கால் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் இருந்த வளர்ப்பு நாயும் பலியானது. காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

