/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; மாணவ, மாணவியர் காயம்
/
பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; மாணவ, மாணவியர் காயம்
பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; மாணவ, மாணவியர் காயம்
பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; மாணவ, மாணவியர் காயம்
ADDED : ஏப் 04, 2024 11:24 PM

திருப்புவனம் : திருப்புவனம் அருகே பராமரிப்பு இல்லாத அரசு டவுன் பஸ் சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர், பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
திருப்புவனம் அருகே மாங்குடியில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் நேற்று மதியம் கிளம்பியது. மதுரையைச் சேர்ந்த மரிய சந்தனசாமி 45, பஸ்சை இயக்கினார்.
பஸ் மேல வெள்ளூர் அருகே செல்லும் போது பஸ்சின் முன், பின்பக்க இணைப்பு துண்டிக்கப்பட்டு டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பஸ் டிரைவர் படுகாயமடைந்தார்.
பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
டிரைவர் உட்பட மூவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

