ADDED : ஏப் 17, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிவகங்கை தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
சிவகங்கை தொகுதியில் ஒரே குடும்பத்திற்கு நாம் ஆதரவளிக்கிறோம். சிவகங்கையை மீட்க வேண்டும் என்றால், சிவகங்கை வளர வேண்டுமென்றால் வேலை வாய்ப்பு வேண்டும் என்றால் அந்த குடும்பம் புறக்கணிக்கப்பட வேண்டும்.
அ.தி.மு.க., வேட்பாளர் எதற்காக தேர்தலில் நிற்கிறார் என்று தெரியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிவகங்கை தொகுதியில் சர்வதேச அளவில் விளையாட்டு அரங்கம் அமைத்து தரப்படும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற தொழிற்சாலை அமைக்கப்படும், என்றார்.

