/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியை எட்டிப் பார்க்காத பா.ஜ., அ.தி.மு.க., வேட்பாளர்கள்
/
சிங்கம்புணரியை எட்டிப் பார்க்காத பா.ஜ., அ.தி.மு.க., வேட்பாளர்கள்
சிங்கம்புணரியை எட்டிப் பார்க்காத பா.ஜ., அ.தி.மு.க., வேட்பாளர்கள்
சிங்கம்புணரியை எட்டிப் பார்க்காத பா.ஜ., அ.தி.மு.க., வேட்பாளர்கள்
ADDED : ஏப் 04, 2024 04:01 AM
சிங்கம்புணரி : பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று வரை சிங்கம்புணரி பகுதியை எட்டி பார்க்காததால் கட்சியினர் உற்சாகமின்றி உள்ளனர்.
சிவகங்கை தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் தேவநாதன், அ.தி.மு.க., சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகின்றனர். காங்., சார்பில் மீண்டும் கார்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ., அ.தி.மு.க., கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் சிங்கம்புணரி பகுதிக்கு வந்து செல்லவில்லை. வழக்கமாக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் தொகுதிக்குள் நுழையும் நிகழ்வு அனைத்து ஒன்றிய தலைமையிடத்தையும் இணைக்கும் விதமாக முதற்கட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சி நடக்கும்.
மேலும் பிரசாரம் துவக்குவதற்கு முன்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்கள் திறப்பு விழா, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என அவ்வப்போது வேட்பாளர்களின் கார்கள் ஏரியாவுக்குள் வந்து செல்லும்.
ஆனால் பா.ஜ., அ.தி.மு.க., கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று வரை சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியை எட்டி கூட பார்க்கவில்லை.
வேட்பாளர் வராமலேயே அ.தி.மு.க., வினர் தேர்தல் அலுவலகத்தையும் திறந்தனர். இதனால் இவ்விரு கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமின்றி தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசியும் இன்னும் சிங்கம்புணரி பகுதிக்கு வரவில்லை. ஆனால் காங்., வேட்பாளர் கார்த்தி வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பும் பின்பும் என பிரசாரத்தை துவக்காமலேயே பலமுறை இப்பகுதியை வலம் வந்துவிட்டார்.
லோக்சபா தேர்தல் என்பதால் தொகுதியின் பரப்பு கூடுதலாக இருந்தாலும், வேட்பாளர்களின் கார்கள் அவ்வப்போது ஏரியாவுக்குள் வந்து சென்றால்தான் கட்சியினரை உற்சாகப்படுத்த முடியும் என கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

