/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் ஸ்டாண்டில் மீண்டும் தபால் நிலையம்
/
பஸ் ஸ்டாண்டில் மீண்டும் தபால் நிலையம்
ADDED : ஏப் 16, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்துாரில் பழைய பஸ் ஸ்டாண்ட் மாடிக் கட்டடத்தில் பல ஆண்டுகளாக தபால் நிலையம் செயல்பட்டது. நல்ல வருவாய் ஈட்டித் தந்ததால் மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளுக்காக தற்காலிகமாக தபால் நிலையம் ஆறுமுகம்பிள்ளை தெருவிற்கு வாடகைக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத ஒதுக்குப்புறமான பகுதி ஆகும். இந்த அலுவலகத்தை பொதுமக்கள் அதிகமானோர் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் உள்ளது.
தற்போது, புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கி விட்டது. இங்கு தபால் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.

