/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் துப்பாக்கியுடன் கைது
/
திருப்புவனத்தில் துப்பாக்கியுடன் கைது
ADDED : மே 23, 2024 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே தவளைகுளம் கண்மாயில் முயல் வேட்டையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம் அருகே தவளைகுளம் கண்மாய் பகுதியில் நேற்று மாலை துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டதாக கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்ட போது திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடியை சேர்ந்த ஜோதி 45, என்பவர் முயல்களை வேட்டையாடியது தெரிய வந்தது. போலீசார் அவரிடமிருந்த துப்பாக்கி, வெடி மருந்து, இறந்த முயல்களை கைப்பற்றி கைது செய்தனர்.

