/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் செயற்கை தளத்துடன் மைதானம் அமைக்க கோரிக்கை
/
சிவகங்கையில் செயற்கை தளத்துடன் மைதானம் அமைக்க கோரிக்கை
சிவகங்கையில் செயற்கை தளத்துடன் மைதானம் அமைக்க கோரிக்கை
சிவகங்கையில் செயற்கை தளத்துடன் மைதானம் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 18, 2024 06:18 AM
சிவகங்கை, : சிவகங்கையில் செயற்கை (சிந்தட்டிக்) தளத்துடன் கூடிய டென்னிஸ் மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கில் சோடியம் மின்விளக்கு பொருத்த வேண்டும் என விளையாட்டு வீரர்கள் வலியுறுத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்கான தடகளப்போட்டி நடந்து வருகிறது. இங்கு வந்த விளையாட்டு வீரர்கள் திடலில் அதிக இடங்கள் இருப்பதால், இங்கு சிந்தட்டிக் தளத்துடன் கூடிய டென்னிஸ் மைதானம் ஏற்படுத்த வேண்டும். இரவிலும் பயிற்சி பெற ஏதுவாக விளையாட்டு திடலை சுற்றிலும் சோடியம் மின் விளக்கு பொருத்தி தர வேண்டும் என வீரர்கள், விடுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விளையாட்டு திடல் முழுவதும் சோடியம் மின் விளக்கு வசதி செய்தால், இரவு வரை மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக அமையும். மேலும், டென்னிஸ் வீரர்கள் அதிகளவில் சிவகங்கையில் வசிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கென தரமான டென்னிஸ் மைதானம் இல்லை. எனவே அதிக இடவசதி உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் சிந்தட்டிக் தளத்துடன் கூடிய தரமான டென்னிஸ் மைதானம் அமைத்து தர வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் துணை தலைவரான சிவகங்கை எம்.பி., கார்த்தி, வீரர்களின் இக்கோரிக்கைக்கு அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அரசிடம் நிதி கோரிக்கை
விளையாட்டு துறையினர் கூறியதாவது: சிவகங்கை வந்த அமைச்சர் உதயநிதியிடம், கலெக்டர் வழியாக சிந்தட்டிக் தளத்துடன் கூடிய டென்னிஸ் மைதானம் அமைக்க ரூ.45 லட்சம் நிதி ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். மேலும், விளையாட்டு திடலில் 1.1 கி.மீ., துாரத்திற்கு 50 சோடியம் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம், என்றனர்.

