/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை
/
சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை
ADDED : ஏப் 26, 2024 12:54 AM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் 2024--25 முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை இந்த மாத இறுதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 பிரிவு 268 ன்படி 2024--25 முதலாம் அரையாண்டுக்கான (ஏப்.2024 முதல் செப்.2024) சொத்து வரியை ஏப்.30க்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயனடையலாம். சொத்து வரியை நகராட்சி கணினி வரிவசூல் மையத்தில் செலுத்தலாம். அல்லது http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக செலுத்தலாம் என்றார்.

