sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர 2,740 மாணவர்கள் விண்ணப்பம்

/

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர 2,740 மாணவர்கள் விண்ணப்பம்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர 2,740 மாணவர்கள் விண்ணப்பம்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர 2,740 மாணவர்கள் விண்ணப்பம்


ADDED : மே 25, 2024 05:04 AM

Google News

ADDED : மே 25, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பில் சேர 1,407 இடத்திற்கு 2,740 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 136 தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி.,யில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மாவட்ட அளவில் காலியாக உள்ள 1,407 இடங்களுக்கு 2,740 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இச்சட்டப்படி எல்.கே.ஜி.,யில் சேர மாணவர் 2020 ஆக., 1 முதல் 2021 ஜூலை 31 க்குள் பிறந்திருக்க வேண்டும். மாவட்ட அளவில் உள்ள 136 பள்ளிகளில் 15 பள்ளிகளுக்கு உரிய ஒதுக்கீட்டிற்குள் மாணவர்கள் விண்ணப்பித்ததால், அவர்களுக்கு எல்.கே.ஜி., சேர்க்கை வழங்கப்படும். அதே நேரம் 121 பள்ளிகளில் ஒதுக்கீட்டிற்கு மேல் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

மாவட்ட அளவில் விண்ணப்பித்துள்ளவர்களில், உரிய ஒதுக்கீட்டில் சீட் பெற்றவர்கள் தவிர்த்து, எஞ்சிய 2,693 பேர்களுக்கு மே 28 ம் தேதி அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இவற்றை கண்காணிக்கஉயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வள மேற்பார்வையாளர் 121 பேர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு நேற்று சிவகங்கையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் (மெட்ரிக்) சரவணக்குமார், (தொடக்க பள்ளி) மாரிமுத்து, (இடைநிலை கல்வி) உதயகுமார் பங்கேற்றனர்.

இது தவிர நிர்ணயிக்கப்பட்ட காலியிடங்களுக்கு மேல் அதிகளவில் விண்ணப்பம் வந்துள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடக்கும் குலுக்கல் முறையை கண்காணிக்க தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் அதிகாரிகள் நியமித்துள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயபிரிட்டோ ஏற்பாட்டை செய்தார்.






      Dinamalar
      Follow us