ADDED : ஏப் 14, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முல்லைக்குளம் கே.புதுக்குளம் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மானாமதுரை அருகே முத்தனேந்தல் வைகை ஆற்று பகுதி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதமாக இக்கிராமங்களில் குடிநீர் வராததால் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீருக்காக 5 கி.மீ., துாரம் சென்று குடிநீர் பிடித்து வருவதாக தெரிவிக்கின்றனர். மேற்கண்ட கிராமங்களில் தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

