ADDED : ஏப் 05, 2024 01:57 AM
சேலம்:சேலம்,
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த்
சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு, வாக்காளர்கள்
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடுவதன் அவசியத்தை
எடுத்துரைக்கும்படி, குறிப்பாக இளைஞர்கள் ஓட்டுப்போடுவதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில், பல்கலை வேந்தர் கணேசன்
வழிகாட்டுதல்படி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை,
ஆட்டையாம்பட்டியில் நடத்தியது.
துறை டீன் செந்தில்குமார்
முன்னிலை வகித்தார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, விழிப்புணர்வு
நடைபயணம், மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்தார்.
தேர்தல் பங்கேற்பு திட்ட அதிகாரி ரவிச்சந்திரன், வீரபாண்டி சட்டசபை
தொகுதி தேர்தல் உதவி அதிகாரி முருகன், சேலம் தெற்கு தாசில்தார்
செல்வராஜ், மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி
சுவாமிநாதன், சேலம் தெற்கு துணை தாசில்தார் ராஜேஸ்வரி, வேம்படிதாளம்
வருவாய் ஆய்வாளர் ராஜவேல், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்
இந்திராணி பங்கேற்றனர்.
துறை மாணவ, மாணவியர், விழிப்புணர்வு
கோஷம் எழுப்பியபடி நடைபயணத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து மனித
சங்கிலி அமைப்பை ஏற்படுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். ஏற்பாட்டை, துறையின் நாட்டு நலப்பணித்திட்ட
ஒருங்கிணைப்பாளர் தனசேகர், டாக்டர் ஜெயபாலன், மெய்பிரபு,
சுற்றுச்சூழல் அமைப்பு ஆலோசகர் ரஞ்சிதா, மோகன், டாக்டர் ஹரிஷ்ராஜ்
செய்திருந்தனர்.

