/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அருநுாற்றுமலைக்கு பஸ் வசதி இல்லை; பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அவதி
/
அருநுாற்றுமலைக்கு பஸ் வசதி இல்லை; பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அவதி
அருநுாற்றுமலைக்கு பஸ் வசதி இல்லை; பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அவதி
அருநுாற்றுமலைக்கு பஸ் வசதி இல்லை; பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அவதி
ADDED : அக் 11, 2024 07:06 AM
வாழப்பாடி: அருநுாற்றுமலைக்கு பஸ் வசதி இல்லாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை சுற்றுவட்டார பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்கள், பஸ் வசதியின்றி சிரமத்துக்கு ஆளாகி
வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க மாநிலத்தலைவர் சுதாகர் கூறியதாவது: பழங்குடியினர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் அருநுாற்றுமலை மேல்நிலை, பள்ளிக்காடு, சிறுமலை தொடக்கப்பள்ளிகள், ஆலடிப்பட்டி நடுநிலை, பெரியவேலாம்பட்டி, சின்னவேலாம்பட்டி, கண்கட்டி ஆலா, கீரப்பட்டி, வாழுத்து, பெலாப்பாடி, சின்னக்குட்டிமடுவு தொடக்கப்பள்ளிகள், பெரியகுட்டிமடுவு உயர்நிலை, வெள்ளிக்கவுண்டனுார் மேல்நிலை உள்ளிட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில், 50க்கும் மேற்பட்டோர், தினமும் காலை, மாலையில் வாழப்பாடியில் இருந்து போதிய பஸ் வசதியின்றி குழுக்களாக சேர்ந்து தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அங்கு பணிபுரியும் மற்ற அரசுத்துறை அதிகாரிகளும் அவதிப்படுகின்றனர். அந்த வாகனத்துக்கு வாரம், 1,000 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். சிலர் பைக்கில் செல்கின்றனர். குறிப்பாக பள்ளிக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ் வசதியின்றி சிரமத்துக்கு ஆளாகின்றனர். கடந்த, 7ல் ஆலடிப்பட்டி, கண்கட்டி ஆலா, பெரிய வேலாம்பட்டி பள்ளி ஆசிரியர்கள், தனியார் வேனில் சென்றபோது விபத்துக்குள்ளாகி, 5 பேர் காயம் அடைந்தனர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் பயன்பெற, பள்ளிக்கு செல்ல வசதியாக காலை, மாலையில் வாழப்பாடியில் இருந்து அருநுாற்றுமலைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

