/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெ.நா.பாளையத்தில் நீதிமன்றம் இடம் தேர்வு செய்த நீதிபதி குழு
/
பெ.நா.பாளையத்தில் நீதிமன்றம் இடம் தேர்வு செய்த நீதிபதி குழு
பெ.நா.பாளையத்தில் நீதிமன்றம் இடம் தேர்வு செய்த நீதிபதி குழு
பெ.நா.பாளையத்தில் நீதிமன்றம் இடம் தேர்வு செய்த நீதிபதி குழு
ADDED : பிப் 03, 2024 03:53 AM
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில் நீதிமன்றம் அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி உத்தரவுப்படி ஆத்துார் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்கள் முனுசாமி, அருண்குமார், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் மாணிக்கம் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம், நீதிமன்றம் அமைக்கும் இடம் குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பெத்தநாயக்கன்பாளையம் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டடத்தில் நீதிமன்றம் செயல்பட இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு அமைய உள்ள நீதிமன்றத்தில் ஏத்தாப்பூர், கருமந்துறை, கரியகோவில் ஆகிய போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, குழுவினர் தெரிவித்தனர்.