/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாப்பிடாமல் மனு அளிக்க வந்த மக்களுக்கு பணம் வழங்கி சாப்பிட அறிவுறுத்திய அமைச்சர்

ADDED : நவ 20, 2024 07:35 AM
சேலம்: சாப்பிடாமல் மனு அளிக்க வந்த மக்களுக்கு பணம் வழங்கி சாப்பிட்டு செல்ல, அமைச்சர் அறிவுறுத்தினார்.
தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், சேலம், கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஏராளமானோர், மனுக்களுடன் காத்திருந்தனர். உடனே அமைச்சர், மனுக்களை வாங்கி படித்தார்.தொடர்ந்து உதவி கமிஷனரை அழைத்து, திருமண உதவி, மாதாந்திர உதவி தொகை உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி, அனைத்து மனுக்களுக்கும் ஒரு வாரத்தில் தீர்வு காணும்படி உத்தரவிட்டார்.
பின் ஒரு பெண்ணிடம், 'சாப்டீங்களா' என கேட்க, அவர், 'இல்லை' என கூறினார். உடனே, 500 ரூபாய் எடுத்து பெண்ணிடம் வழங்கினார். தொடர்ந்து மற்றவர்களையும் கேட்க, 'யாரும் சாப்பிடவில்லை' என கூறினர். இதனால் மேலும், 2,000 ரூபாயை உதவியாளரிடம் வாங்கி, மக்களுக்கு வழங்கினார்.பின், 'அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். உங்கள் மனுக்களுக்கு உரிய வாரத்தில் தீர்வு காணப்படும்' என கூறி அனுப்பிவைத்தார். இதையடுத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.