/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டிலிலிருந்து விழுந்தஎஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
/
கட்டிலிலிருந்து விழுந்தஎஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
ADDED : மே 02, 2025 02:31 AM
வேப்பனஹள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே என்.தாசரப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ், 51. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். கடந்த, 6 மாதமாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம், 24ம் தேதி முதல், வரும், 4ம் தேதி வரை மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த, 29 இரவு, 7:00 மணிக்கு, தன் வீட்டின் படுக்கை அறைக்கு துாங்க சென்றார். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரமேஷ் உயிரிழந்தது தெரிந்தது. அவரது அண்ணன் துரைசாமி, 57, புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார்
விசாரிக்கின்றனர்.
**************************

